கறிவேப்பிலையின் 7 நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்

கறிவேப்பிலை (அறிவியல் பெயர்: Murraya koenigii) என்பது தென் இந்திய மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவை மற்றும் நறுமணம் மட்டுமின்றி கறிவேப்பிலையின் நன்மைகள் பல.

கறிவேப்பிலையில் வைட்டமின்கள் (A, B,C, E) மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் போன்ற ஏராளமான கனிமங்கள் நிறைந்துள்ளன.

இங்கு நாம் கறிவேப்பிலையின் 7 நிருபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை காண்போம்.

Benefits of Curry leaves in Tamil

கறிவேப்பிலை நன்மைகள் (Benefits Of Curry Leaves):

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

கறிவேப்பிலை ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் கொண்டவை.

மேலும், கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (1).

புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்

கறிவேப்பிலையில் உள்ள மகானின் (mahanine) என்னும் வேதிப்பொருள் புற்றுநோய் செல்களை (2, 3) எதிர்த்துப் போராட உதவுகிறது.

மேலும், கறிவேப்பிலையானது மார்பகப் புற்றுநோயினை கட்டுப்படுத்தவும் உதவுகிறது என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நீரிழிவு நோய் தான். ஏனெனில், நீண்ட காலம் நீரிழிவு நோய் இருப்பது, சிறுநீரக நோய்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

தேசிய சுகாதார நிறுவனம் (NIH) நடத்திய ஆய்வின்படி, கறிவேப்பிலையானது சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் வலி கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் பெற்றுள்ளது (4).

இரத்த சோகை வராமல் தடுக்கிறது

இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் உடலில் போதுமான இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் இல்லாத ஒரு நிலையாகும்.

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic Acid) மிக அதிகமாக இருப்பதால் கறிவேப்பிலை இரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது (5).

எடை இழப்பிற்கு உதவுகிறது

கறிவேப்பிலை இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

எனவே, இவற்றை அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் உடல் எடையை வேகமாக இழக்க முடியும் (6).

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

ஒரு ஆய்வின் படி (7), ஒரு மாதத்திற்கு 12 கிராம் கறிவேப்பிலை தூள் சாப்பிட்டு வரும் போது உணவுக்கு முன் மற்றும் உணவுக்கு பிந்தைய இரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறையும் என தெரிய வந்துள்ளது.

கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது

உங்கள் கண்களுக்கு வைட்டமின் ஏ மிக அவசியம். வைட்டமின் ஏ குறைபாடினால் மாலைக்கண் நோய் வரலாம் (8).

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. அவற்றை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் கண்பார்வை மேம்படுவதோடு மாலைக்கண் நோய் வராமல் தடுக்கவும் முடியும்.

தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

கறிவேப்பிலையில் புரோட்டீன் மற்றும் பீட்டா-கரோட்டின் எனும் வேதிப்பொருளும் மிக அதிமாக உள்ளன. இவை தலை முடி உதிர்வதைத் தடுக்கிறது. மேலும், கறிவேப்பிலை தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது (9).

கறிவேப்பிலை குறித்த இந்த அற்புதமான ஆரோக்கிய பலன்களை அறிந்த பிறகு, அடுத்த முறை அவற்றை தூக்கி எறிவீர்களா?

Exit mobile version