உங்கள் BMI குறியீட்டெண் 25க்கு மேல் இருப்பது நீங்கள் உடல் பருமனோடு இருப்பதை காட்டுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற பல தீவிரமான உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே, சாதாரண வரம்புகளில் உங்கள் BMI அளவை பராமரிப்பது அவசியமாகும் (18.5 முதல் 25). உடல் எடையை குறைப்பது என்பது, கலோரிகளை குறைப்பது என்று அனைவரும் அறிவர், ஆனால் இங்கே உடற்பயிற்சி இல்லாமல் இயற்கையாக உடல் எடையை குறைக்கும் வழிகள் 7 பட்டியலிட்டுள்ளேன்.
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கும் வழிகள் (Weight Loss Tips)
உணவுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்
உணவுக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, பசியை தடுத்து உங்களை குறைவான அளவு உணவை உடகொள்ள தூண்டுகிறது. இதன்மூலம் கலோரிகளின் அளவை குறைத்து உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (1).
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்
பாதாம், முழு தானியங்கள், ஆப்பிள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. அத்திப்பழம், கொழுப்பில்லாத பால் ஆகியவை இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இயற்கையாக உடல் எடையை குறைக்க உதவுகிறது (2).
கார்போஹைட்ரேட் குறைவாக உட்கொள்ளுதல்
குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் கொழுப்பை குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் (3). புழுங்கலரிசி, ரொட்டி, குளிர்பானங்கள் போன்ற கார்போஹைட்ரேட் அதிகமான பொருட்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக சிவப்பு அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற குறைந்த அளவு கார்போஹைட்ரெட் உள்ள பொருட்களை உட்கொள்ளுங்கள்.
உணவைத் தவிர்த்துவிடாதீர்கள்
உணவை தவிர்ப்பதால்,நாளின் பிற்பகுதியில் அதிக உணவு உட்கோள்ள தூண்டுவதோடு உடல் எடையை அதிகரிக்கும் அபாயம் நேரிடுகிறது என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஒரு வேளை அதிக உணவு உண்பது அல்லது உணவைத் தவிர்ப்பதற்கு பதிலாக, குறைந்த அளவு உணவை அடிக்கடி உட்கொள்ளவும்.
உங்கள் உணவில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சேர்க்கவும்
தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, உங்கள் வழக்கமான உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சேர்ப்பதால் உடல் எடையைக் குறைக்க முடியும் (4). முட்டையின் மஞ்சள் கரு, காளான், சால்மன் மீன் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வேகமாக எடையை குறைக்க முடியும் (5).
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்கள் மிக அதிகம். அவை உங்கள் எடை இழப்பு திட்டத்தின் மிகப்பெரிய எதிரி. பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதற்கு முன், தயாரிப்பு லேபிளில் ஊட்டச்சத்து மதிப்பை சோதித்துகொள்ளுங்கள்.மேலும் அதிக கார்போஹைடிரேட் மற்றும் கொழுப்பு உணவுகளிலிருந்து விலகியிருங்கள்.
சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ அல்லது காபி எடுத்துக்கொள்ளவும்
க்ரீன் டீ மற்றும் காபியில் காப்ஃபைன் வளமாக நிறைந்துள்ளது. காப்பைன் உங்கள் வளர்சிதை மாற்றத்தின் ஊக்கியாகவும் மற்றும் கொழுப்பை எரிக்கவும் உதுவுகிறது. மேலும் க்ரீன் டீ உங்கள் உடலின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது (6).