ஆப்பிள் – 6 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

- Advertisement -

“ஒரு நாள் ஒரு ஆப்பிள் உண்பது மருத்துவரை விட்டு விலகி வைத்திருக்கும்” என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. உண்மையில், ஆப்பிள் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பல.

ஆப்பிளில் மிகவும் குறைவான சத்துக்களே உள்ளன. ஒரு ஆப்பிளில் கிட்டத்தட்ட 86% தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனால், அவற்றில் பல உடல்நல நன்மைகளை வழங்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் வளமாக நிறைந்துள்ளன.

ஆப்பிள் பழத்தின் 6 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நாம் இப்போது பார்க்கலாம்.

Apple Benefits in Tamil - ஆப்பிள் நன்மைகள்


ஆப்பிள் நன்மைகள் (Benefits Of Apple):

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது

ஆப்பிள் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உகந்த பழம் ஆகும். ஏனெனில் ஆப்பிளின் கிளைசெமிக் இண்டெஸ் (Glycemic Index) 39 மட்டுமே (1).

கிளைசெமிக் இன்டெஸ் குறியீடு என்பது எவ்வளவு வேகமாக ஒரு உணவுப் பொருள் நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என காட்டுகிறது. எனவே குறைவான கிளைசெமிக் இன்டெஸ் கொண்ட உணவுப்பொருள்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

ஆப்பிளில் கார்போஹைட்ரேட் அளவும் குறைவாகவே உள்ளது. 100 கிராம் ஆப்பிளில் 16 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.

மேலும், ஆப்பிளில் காணப்படும் ஆன்டிஆக்சிடென்ட்டுகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்குவும், டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன (2,3).

நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது

ஆப்பிள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க, குறிப்பாக நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

- Advertisement -

ஏனெனில், ஆப்பிளில் புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்ட ஃப்ளோனாய்டு (Flavanoid) எனப்படும் ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது (4,5).

ஆப்பிள் எடை இழப்பிற்கு உதவுகிறது

ஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. 100 கிராம் ஆப்பிளில் 52 கலோரிகள் மட்டுமே உள்ளது.

மேலும், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் நடத்திய ஆய்வின் படி, தினமும் மூன்று ஆப்பிள்கள் உட்கொள்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும் (6).

ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது

ஆஸ்துமா அல்லது மூச்சிலைப்பு என்பது ஒரு நபரின் மூச்சுக்குழாயை வீக்கமுற்று சுவாசிப்பதை கடினமாக ஆகுகிறது.

ஆப்பிளில் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி-அழற்சி பண்புகள் இருப்பதால் அவை ஆஸ்துமாவை தடுக்க உதவுகின்றன (7).

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

உங்கள் உடல்நலத்திற்கு மோசமான LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும் திறன் ஆப்பிள்களில் உள்ளது. மேலும் இவை நல்ல கொலஸ்ட்ராலை (HDL) (8, 9) அதிகரிக்கவும் உதவுகின்றன.

மலச்சிக்கலை போக்கும்

ஆப்பிளில் மலச்சிக்கலை குறைக்க உதவும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது (10, 11). குறிப்பாக, ஆப்பிள் தோலில் பெரும்பாலான நார்ச்சத்து இருப்பதால், அவற்றை முழுவதுமாக சாப்பிடுவது நல்லது.

100 கிராம் ஆப்பிள் பழத்தில் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.மேலும், நார்ச்சத்து மூல நோய் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

- Advertisement -

எச்சரிக்கை: ஆப்பிளின் விதைகள் விஷத்தன்மை கொண்டவை

ஆப்பிளைக் கடித்து உன்னும் போது ஆப்பிள் விதைகளை நீங்கள் சாப்பிடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை கொண்ட சயனைடு கொண்டிருப்பதால், அதிகமாக உண்ணும் போது அது உயிருக்கு சேதமாக அமையும் (12).

- Advertisement -