பாதாம் பருப்பின் 10 மகத்தான ஆரோக்கிய நன்மைகள்

- Advertisement -

பாதாம் பருப்பில் (Almond) உடலுக்கு ஏற்ற மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இங்கு அற்புதமான 10 பாதாம் பருப்பின் நன்மைகள் பட்டியலிட்டுள்ளேன்.

பாதாம் பருப்பின் 10 மகத்தான ஆரோக்கிய நன்மைகள்

பாதாம் நன்மைகள் (Almond Benefits) :

எடை இழப்பிற்கு உதவுகிறது

பாதாம் பருப்பில் உடல் நலத்திற்கு ஏற்ற நல்ல கொலஸ்ட்ரால் (HDL) (1) வளமாக நிறைந்துள்ளது. மேலும் இது உடல் நலத்திற்கு கேடான LDL கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது (2).

மலச்சிக்கலை தடுக்கும்

1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் ஏறத்தாழ 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்துள்ள பாதாம் சாப்பிடுவதால் செரிமானத்தைத் எளிதாகுக்குகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

வைட்டமின் ஈ நிறைந்தது

பாதாம் வைட்டமின் ஈ-யின் வளமாக உள்ளது. வைட்டமின் E இதயத்திற்கு நல்லது. மேலும் வைட்டமின் E வயதாவதை தடுக்க உதவுகிறது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது 

பாதாம் பருப்பில் கால்சியம், பொட்டாசியம், காப்பர், துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுடன் நிறைய தாது உப்புக்கள் உள்ளன, இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை (3).

நீரிழிவை தடுக்க உதவும்

பாதாம் பருப்பின் கிளைசீமிக் இன்டெக்ஸ் (4) மிக குறைவு .அவற்றை உண்பது உடனடியாக உங்கள் இரத்தச் சர்க்கரையை வெளியே விடாது. மேலும், உணவுக்குப்பின் (5) இரத்த சர்க்கரை அளவை குறைக்க பாதாம் உதவக்கூடும் என்று ஆய்வுகள் நிரூபித்துளளன.

முடி உதிர்வதை குறைக்கிறது

பாதாம் பருப்பில் மெக்னீசியம் மற்றும் தாது உப்புக்கள் வளமாக நிறைந்துள்ளது. அவற்றை உங்கள் வழக்கமான உணவில் சேர்ப்பது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும் (6).

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது 

பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, அந்த கனிமங்கள் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை (7).

- Advertisement -

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

பாதாம் பருப்பில் உள்ள ஆரோக்கியமான ஒற்றை நிறைவுறா கொழுப்பு (Monounsaturated fat) & பொட்டாசியம் இரத்த கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்குவும் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது (8).

புரதச்சத்து நிறைந்தது

1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் ஏறக்குறைய 6 கிராம் புரதம் உள்ளது. அவற்றை உண்பது உங்களை பசியின்றி முழுமையாய் நீண்ட நேரம் வைத்திருக்கும் (9).

மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது

பாதாம், மூளையின் செல்களின் வளர்ச்சிக்கும்,செல்களை சரிசெய்வதற்கும் உதவுகிறது. மேலும், என்ஹெச் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்) ஆய்வுகள், பாதாம் சாப்பிடுவதால் மூளையின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர் (10).

புற்று நோய் வராமல் தடுக்கும்

தினமும் பாதாம் உண்டு வருபவர்கள் புற்றுநோய் அபாயத்திலிருந்து தடுத்துக் கொள்ள முடியும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (11).

தினமும் எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்

8 முதல் 10 பாதாம் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிடும் போது பாதாமில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் வாய்வு தொந்தரவு வரலாம். மேலும், பாதாமில் உள்ள வைட்டமின் E அளவு உடலில் அதிகமாவதால் வயிறுப்போக்கும் தலைவலியும் வரலாம்.

- Advertisement -