சேப்பங்கிழங்கு: ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

- Advertisement -

சேப்பங்கிழங்கு (Cocoyam) அல்லது டரோ (Taro) என்பது உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வழக்கமாக வளரும் ஒரு பயிர் ஆகும்.

சேப்பங்கிழங்கு மாவுச்சத்து அதிகம் உள்ள ஒரு கிழங்கு பயிராகும்.

மக்கள் இதை உணவுக்காகவோ அல்லது அலங்காரத் தாவரமாகவோ வளர்க்கின்றனர்.

மேலும், சேப்பக்கிழங்கு பல மருத்துவ பயன்களையும் வழங்குகிறது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக நாம் காணலாம்.

சேப்பங்கிழங்கு நன்மைகள் - Benefits Of Cocoyam In Tamil

ஊட்டச்சத்து உண்மைகள்:

100 கிராம் சமைத்த சேப்பங்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (1).

  • கலோரிகள்: 142 கிலோ கலோரி
  • கார்போஹைட்ரேட்: 34.6 கிராம்
  • நார்ச்சத்து: 5.1 கிராம்
  • கொழுப்பு: 0.11 கிராம்
  • புரதம்: 0.52 கிராம்
  • கால்சியம்: 18 மி.கி – தினசரி மதிப்பில் 2%
  • இரும்புச்சத்து: 0.72 மிகி – தினசரி மதிப்பில் 6%
  • பொட்டாசியம்: 484 மி.கி – தினசரி மதிப்பில் 10%
  • வைட்டமின் பி 6: 0.331 மிகி – தினசரி மதிப்பில் 25%
  • வைட்டமின் ஈ: 2.93 மி.கி – தினசரி மதிப்பில் 20%
  • ஃபோலேட்: 19 மைக்ரோ கிராம் – தினசரி மதிப்பில் 5%
  • வைட்டமின் சி: 5 மி.கி – தினசரி மதிப்பில் 5%
  • வைட்டமின் டி: 1.2 மைக்ரோ கிராம் – தினசரி மதிப்பில் 8%

சேப்பங்கிழங்கு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

சேப்பங்கிழங்கு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ.

1. நீரிழிவு நோய்க்கு நல்லது

சேப்பங்கிழங்கு 63 என்ற மிதமான கிளைசெமிக் குறியீட்டை (GI) கொண்டுள்ளது (2). மேலும், இதில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

- Advertisement -

இது மட்டுமின்றி, எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் சேப்பங்கிழங்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என காட்டுகின்றன (3).

எனவே, சேப்பங்கிழங்கு உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை வேகமாக உயர்த்தாது. இருப்பினும், சேப்பங்கிழங்கு மிதமான GI கொண்டுள்ளதால், அவற்றை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம்.

2. சிறுநீரக பாதிப்பைத் தடுக்க உதவுகிறது

நீரிழிவின் போது ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை அளவு நமது சிறுநீரகத்தின் பாகங்களை சேதப்படுத்தும். இது நீரிழிவு நெப்ரோபதி (Diabetic Nephropathy) என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு ஏற்படும் சிறுநீரக பாதிப்பை தடுக்க சேப்பங்கிழங்கு உதவக்கூடும் என்று ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன (4).

3. இதயத்திற்கு நல்லது

சேப்பங்கிழங்கு அதிக நார்ச்சத்துகள் மற்றும் குறைந்த அளவு கலோரிகளையே கொண்டுள்ளதால் எடை இழப்புக்கு நல்லது.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது (5).

மேலும், மற்றொரு ஆய்வில் சேப்பங்கிழங்கு  இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவுகிறது என தெரியவந்துள்ளது (6).

எனவே, சேப்பங்கிழங்கு உண்பது ஆரோக்கியமாக உங்கள் இதயத்தை பராமரிக்க உதவும்.

4. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

- Advertisement -

சேப்பங்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

மேலும், சேப்பங்கிழங்கு இலைகளின் சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது (7).

எனவே, உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க சேப்பங்கிழங்கு உதவக்கூடும்.

5. வைட்டமின்கள் நிறைந்தவை

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த சேப்பங்கிழங்கை சாப்பிடலாம். மேலும், கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் சேப்பங்கிழங்கை NSW உணவு ஆணையம் பரிந்துரைக்கிறது (8).

சேப்பங்கிழங்கில் பி வைட்டமின்கள், வைட்டமின் டி மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைட்டமின்கள் மிகவும் அவசியம் (9).

மேலும், சேப்பங்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை இரண்டும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

6. புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது

சேப்பங்கிழங்கு புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது (10). இதில் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன (11).

ஃபிளாவனாய்டு நிறைந்த உணவுகளை உண்டு வருவது புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன (12).

- Advertisement -

எனவே, உங்கள் வழக்கமான உணவில் சேப்பங்கிழங்கை சேர்ப்பது புற்றுநோயைத் தடுக்க உதவும்.

சுருக்கமாக சொன்னால், சேப்பங்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன.

இது நீரிழிவு நோய்க்கு நல்லது மற்றும் இதய நோய்களைத் தடுக்கிறது. மேலும், இது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

தினமும் சேப்பங்கிழங்கு உட்கொள்ளும் ஒருவருக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

எனவே, நமது அன்றாட உணவில் சேப்பங்கிழங்கு உண்டு வருவது நம்மை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.

- Advertisement -