சேனைக்கிழங்கு: ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகள்

- Advertisement -

சேனைக்கிழங்கு அல்லது யாம் (Elephant Foot Yam) மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும்.

இது ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற பல மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது அறிவியல் ரீதியாக அமோர்போபாலஸ் பியோனிஃபோலியஸ் (Amorphophallus paeoniifolius) என்று அழைக்கப்படுகிறது.

சேனைக்கிழங்கு வழக்கமான சமையல் உட்பட பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு ஆகும் (1).

இந்தப் பதிவில் அதன் ஊட்டச்சத்து விவரத்தையும், சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சேனைக்கிழங்கு நன்மைகள் - Benefits of elephant yam in tamil

ஊட்டச்சத்து உண்மைகள்:

சேனைக்கிழங்கில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை வளமாக நிறைந்துள்ளன.

100 கிராம் சேனைக்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்தை வழங்குகிறது (2).

  • கலோரிகள்: 118 கலோரிகள்
  • நீர்ச்சத்து: 66 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்
  • கொழுப்பு: 1.5 கிராம்
  • புரதம்: 9.81 கிராம்
  • நார்ச்சத்து: 5.7 கிராம்
  • பொட்டாசியம்: 1208 மிகி
  • கால்சியம்: 20 மிகி
  • இரும்பு: 1.8 மிகி
  • மெக்னீசியம்: 82 மிகி
  • சோடியம்: 14.2 மிகி
  • துத்தநாகம்: 2 மிகி
  • தாமிரம்: 0.3 மிகி

சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் இதோ.

சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

1. எடை இழப்பிற்கு உதவுகிறது

- Advertisement -

சேனைக்கிழங்கானது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை மிக அதிகமாகவும் மற்றும் குறைவான கலோரிகளையும் கொண்டுள்ளது.

மேலும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் (3),  பாசிப்பயறு மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவை கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது என தெரியவந்துள்ளது.

எனவே, சேனைக்கிழங்கு சாப்பிடுவது உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும்.

2. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது

சேனைக்கிழங்கு சாறில் அழற்சி எதிர்ப்பு (Anti-Inflammatory) பண்புகள் உள்ளன என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன (4).

எனவே, இது பல அழற்சி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி நோய்களின் போது வலியை தணிக்க உதவும்.

3. கல்லீரல் செயல்பாட்டை பாதுகாக்கிறது

சேனைக்கிழங்கில் குர்செடின் (Quercetin) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது.

கல்லீரல் செயல்பாடுகளை பாதுகாப்பதில் இந்த சேர்மம் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (5).

4. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது

சேனைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன (6).

- Advertisement -

எனவே, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

மேலும், இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது முதுமைத் தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் (Prevents Ageing) உதவுகின்றன.

5. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது

சேனைக்கிழங்கு குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் உங்கள் ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாது (7).

மேலும், இதில் மாவுச்சத்து குறைவாகவும் மற்றும் கணிசமான அளவு நார்ச்சத்தும் உள்ளது.

இதுமட்டுமின்றி, சேனைக்கிழங்கில் நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ன (8).

எனவே, இதனை உங்கள் வழக்கமான உணவுகளில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

6. ஹார்மோன் சமநிலை

சேனைக்கிழங்கானது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உகந்த அளவில் பராமரிக்கிறது.

சேனைக்கிழங்கின் இந்த குணம் மாதவிடாய் முன் ஏற்படும் வலிகளை தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

- Advertisement -

இதற்கு அதில் உள்ள வைட்டமின் B6 கூட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது (9).

7. மன அழுத்தத்தை தணிக்க உதவுகிறது

ஜிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் சேனைக்கிழங்கில் வளமாக நிறைந்துள்ளன.

இந்த கனிமங்கள் மன அழுத்தத்தை தணிக்கவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.

8. மலச்சிக்கலை போக்கும்

சேனைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது.

மேலும், இது தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது (10).

எனவே, சேனைக்கிழங்கு நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் (11).

உடல்நல அபாயங்கள்:

நம் உடலுக்கு பல நன்மைகளை இந்த சேனைக்கிழங்கு வழங்கினாலும், அதில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆக்ஸலேட் (Oxalate) மற்றும் டானின் (Tannin) போன்ற சில நச்சுப்பொருட்கள் உள்ளன (12).

எனவே, இந்த நச்சுக்களை அகற்ற அவற்றை நன்கு சமைத்து உண்பது அவசியம் (13).

Like Us On Facebook

- Advertisement -