டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள், சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

- Advertisement -

டெங்கு அறிகுறிகள் (Dengue Symptoms):

பின்வரும் அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கக்கூடும் (1).

  • திடீரென அதிக காய்ச்சல் ஏற்படுவது
  • தலைவலி
  • கண்களின் பின்புறம் வலி
  • அதீத சோர்வு
  • மூட்டு மற்றும் தசை வலி
  • வாந்தி மற்றும் தோல்களில் தடிப்பு.

இந்தக் காய்ச்சலின் போது உங்களுக்கு கடுமையான மூட்டு வலி மற்றும் தசை வலி ஏற்படும். எனவே இது பிரேக் போன் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் மூக்கு, ஈறுகளில் இருந்து அல்லது தோலின் கீழ் இருந்து இரத்தம் கசிதல் ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் - Dengue fever symptoms tamil

சிகிச்சை

டெங்கு போன்ற அனைத்து வைரஸ் நோய்களுக்கும், குறிப்பிட்ட எந்த மருந்தும் இல்லை. டெங்கு வராமல் தடுக்க தடுப்பூசியும் இல்லை. ஆனால், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வதின் மூலம், அறிகுறிகளைச் சமாளிக்கலாம்.

 உணவே மருந்து! மருந்தே உணவு!

எனினும் நாம் சரியான உணவுகளை உண்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை விரைவாக குணப்படுத்த முடியும்.

சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்
  • பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும்
  • மூட்டு மற்றும் தசை வலியை தணிக்கவும்

உதவுவதால் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை தணிக்க முடியும்.

டெங்கு காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் (Foods To Eat):

இங்கு நாம் டெங்கு காய்ச்சலை விரைவாக குணப்படுத்த சில உணவுகளை காணலாம்.

இவை அனைத்தும் ஆராய்ச்சியாளர்களால் சோதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

1. பப்பாளி இலைச்சாறு

டெங்கு காய்ச்சல் நமது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்கள் எனப்படும் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கையை குறைக்கிறது.

இந்த பப்பாளி இலையில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் பண்புகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன.

இந்த பப்பாளி இலைச்சாறு நம் ரத்த செல்களின் சவ்வுகளை உறுதிப்படுத்தவும் உதவுகிறது (2). மேலும் மன அழுத்தத்தினால் நமது ரத்த செல்கள் அழிந்து போவதை தடுக்க உதவுகிறது.

எனவே பப்பாளி இலைச்சாறு உங்களது பிளேட்லெட் சிதைந்து போகாமல் இருப்பதை தடுத்து, பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது (3).

2. வியக்க வைக்கும் மூலிகை – அமிர்தவல்லி (Giloy)

கிலாய் அல்லது அமிர்தவல்லி என்று அழைக்கப்படும் மூலிகையானது மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த மூலிகை வேறு எந்த மூலிகையிலும் இல்லாத அளவிற்கு ஆன்ட்டி-அழற்சி பண்புகளை கொண்டுள்ளது.

இதனால் இவை இரண்டு நன்மைகளை டெங்கு நோயாளிகளுக்கு வழங்குகிறது. ஒன்று உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. மற்றொன்று நோயாளிகளுக்கு அளவற்ற துன்பங்களை உண்டாக்கும் மூட்டு வலியை தணிக்க உதவுகிறது (4, 5, 6).

3. மாதுளம்பழம்

இந்தியாவில் ஒரு டெங்கு நோயாளியின் மீது நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில் (7), மாதுளம் பழச்சாறை உண்பது  இரத்த அளவுறுகளில் (Blood parameters) குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது.

டெங்கு காய்ச்சலின் போது மாதுளம் பழச்சாறை குடித்து வருவது பிளேட்லெட் மற்றும் ரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை மீட்பதில் பயன்தரும் என்று கண்டறியப்பட்டது.

- Advertisement -

4. இளநீர்

இதே ஆய்வில் (7), இளநீரைக் குடித்து வருவது உடல் ஆரோக்கியத்தை மீட்டு, நோயாளியிடம் டெங்கு அறிகுறிகளைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கிறது என்று கண்டறியப்பட்டது.

இந்த இளநீரில் பொட்டாசியம், வைட்டமின்கள் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன (8).

டெங்கு காய்ச்சலின் போது நமது உடலில் நீர் இழப்பு (Dehydration) ஆகாமல் இருப்பதற்கும் இளநீர் உதவுகிறது.

5. சிட்ரஸ் பழங்கள்

நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், நமது திசுக்களை பராமரிப்பதற்கும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கின்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி மிக அதிகமாக உள்ளன. இதன் விளைவாக சிட்ரஸ் பழங்கள் மற்றும் அவற்றின் சாறு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கு பெரும் பயன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் மேலே குறிப்பிட்ட ஆய்வில் (7), சாத்துக்குடி பழச் சாறு டெங்கு அறிகுறிகளைத் தனிக்க உதவுகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods To Avoid)

அனைத்து வகையான எண்ணெய் மற்றும் பொரித்த உணவு வகைகள், வயிற்றில் அமிலத்தை உருவாக்கும் காரம் நிறைந்த உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், இதயத்துடிப்பை அதிகரிக்கும் காப்ஃபைன் அதிகம் உள்ள குளிர்பானங்கள், மற்றும் ஜீரணிக்க கடினமாக இருக்கும் அசைவ உணவுகள் எல்லா சூழ்நிலைகளிலும் தவிர்க்கப்பட வேண்டும் (9).

- Advertisement -

சுருக்கமாக, பழச்சாறுகள், காய்கறிகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இயற்கை உணவுகள் உங்களை டெங்குவில் இருந்து விரைவாக குணப்படுத்த உதவும். அதே நேரத்தில், ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -