மொசாம்பி (சாத்துக்குடி) ஜூஸ் ஆரோக்கிய நன்மைகள்

- Advertisement -

சாத்துக்குடி என்று அழைக்கப்படும் மொசாம்பி (அறிவியல் பெயர்: Citrus limetta) பிரபலமான சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றாகும். மொசாம்பி ஜூஸ் சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி பல உடல்நல நன்மைகளையும் அளிக்கிறது (1).

இங்கு மொசாம்பி (சாத்துக்குடி) ஜூஸ் எடுத்துக் கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்களை நாம் காண்போம்.

மொசாம்பி ஜூஸ்: ஆரோக்கிய நலன்கள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகள்

மொசாம்பி (சாத்துக்குடி) ஜூஸ் ஆரோக்கிய நன்மைகள்:

கலோரிகள் மிகவும் குறைவாக கொண்டுள்ளது

மொசாம்பி ஜூஸ் மிகவும் குறைவான அளவு கலோரிகளை கொண்டுள்ளது. அவற்றில் 90% தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் மிகவும் நல்லது.

ஊட்டச்சத்து விவரம்

100 கிராம் சத்துக்குடியில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன (2).

  • கலோரிகள்: 25 கிலோ கலோரி
  • கார்போஹைட்ரேட்: 8.4 கிராம்
  • நார்ச்சத்து: 0.4 கிராம்
  • கொழுப்பு: 0.1 கிராம்
  • பொட்டாசியம்: 117 மி. கிராம்
  • கால்சியம்: 14 மி. கிராம்
  • வைட்டமின் C: 30 மி. கிராம்

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

மொசாம்பி, எலுமிச்சை, ஆரஞ்சு உட்பட அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் C மிக அதிகமாக உள்ளது.

வைட்டமின் சி நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும் (3).

மேலும், சாத்துக்குடி ஜூஸ் வைரஸ் தொற்றுகளை தடுக்கவும், அவை ஏற்பட்டால் விரைவாக குணபடுத்தவும் உதவும் (4).

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது

- Advertisement -

மொசாம்பி ஜூஸ் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளை கொண்டுள்ளது (5).

இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் புற்று நோயைத் தடுக்கும் குணங்களை கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸ் உட்கொள்வதன் மூலம், புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும் (6).

சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

சாத்துக்குடி ஜூஸ் நிறைய சிட்ரிக் அமிலங்களை கொண்டவை என்பது நம் அனைவரும் அறிந்ததே.

சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

எனவே, சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால், சிறுநீரக கற்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்க முடியும் (7).

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மொசாம்பி ஜூஸில் நமது எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் கணிசமான அளவு உள்ளது.

மேலும், சாத்துக்குடி ஜூஸில் பாலிபனொல்ஸ் (Polyphenols) போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் மிக அதிகமாக உள்ளன.

- Advertisement -

இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் எலும்புகளை பலப்படுத்த உதவக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (8).

சர்க்கரை நோயை வராமல் தடுக்க உதவும்

சாத்துக்குடி ஜூஸில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலசிக்கல் வராமல் தடுக்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக உட்கொள்வது, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் (9).

மேலும் நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகளில் சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களையும் அமெரிக்கன் டைபெடிக் அஸோஸியேஷன் பரிந்துரைக்கிறது (10).

- Advertisement -