வரகு: ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகள்

- Advertisement -

வரகு அல்லது கோடு மில்லட் (Kodo Millet) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது ஒரு சிறிய, பழுப்பு நிற தானியம். இதன் அறிவியல் பெயர் பாஸ்பலம் ஸ்க்ரோபிகுலட்டம் (Paspalum scrobiculatum) ஆகும்.

இது முக்கியமாக நேபாளம், இந்தியா, வியட்நாம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது.

இந்தியாவில், மக்கள் இதை அரிசி போல உட்கொள்கிறார்கள் அல்லது அதன் மாவைப் பயன்படுத்தி புட்டு செய்கிறார்கள்.

மேலும், வரகு அரிசியானது பன்றிகள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் போன்ற விலங்குகளுக்கு உணவளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரகு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது (1).

வரகு நன்மைகள் - Benefits Of Kodo Millet In Tamil

ஊட்டச்சத்து உண்மைகள்:

வரகு அரிசியானது புரதம், நார்சத்துக்கள், மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவற்றின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

100 கிராம் வரகு பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (2).

  • கலோரி: 353 கிலோ கலோரி
  • நார்ச்சத்து: 5.2 கிராம்
  • புரதம்: 9.8 கிராம்
  • கார்போஹைட்ரேட்: 66.6 கிராம்
  • கொழுப்பு: 3.6 கிராம்
  • இரும்பு: 1.7 மி.கி.
  • வைட்டமின் பி -6: 0.15 மி.கி.
  • கால்சியம்: 35 மி.கி.
  • வைட்டமின் பி 2: 0.09 மி.கி.
  • வைட்டமின் பி 3: 2 மி.கி.

இப்போது நாம் வரகு அரிசி உண்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வரகு அரிசி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

1. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது:

- Advertisement -

வரகு அரிசியானது ஒரு மிதமான கிளைசீமிக் குறியீட்டைக் (GI) கொண்டுள்ளது. எனவே, அது உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை விரைவில் உயர்த்தாது (3).

மேலும், இதில் புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன.

அதுமட்டுமின்றி, ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் மீது நடத்திய சோதனையில் வரகு அரிசியானது சர்க்கரை நோய்க்கு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது (4).

எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசிக்கு பதிலாக வரகு அரிசி உண்டு வருவது மிகுவும் நல்லது.

2. இரத்த கொலஸ்ட்ரால் அளவுகளை முறைப்படுத்த உதவுகிறது:

வரகு, தினை போன்ற அனைத்து சிறுதானியங்களிலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் மிகக் குறைவாகவே உள்ளன.

வரகு நம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து, நம் உடலுக்கு நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது (5).

3. எடை இழப்பிற்கு உதவுகிறது

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறுதானியங்கள் ஒரு சிறந்த உணவாகும்.

ஒரு ஆய்வில் (6), வரகு உண்டு வந்தவர்களுக்கு உடல் எடை மற்றும் உடல் கொழுப்பு கணிமான அளவு குறைந்துள்ளது.

- Advertisement -

எனவே, அன்றாட உணவுகளில் வரகு அரிசி அடிக்கடி சேர்த்து வருவது உங்களுக்கு எடையை குறைக்க உதவும்.

4. ஆன்டிஆக்சிடன்ட்டுகள் நிறைந்தது

அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை அடிக்கடி உண்டு வருவது மூளையில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) அதிகரிக்கிறது. இது நமது மூளை செல்களை சேதப்படுத்தி மறதி நோய் (Dementia) ஏற்பட வழிவகுக்கும்.

இந்த நோய் ஞாபக மறதி, மனச்சோர்வு மற்றும் தூக்கக் கோளாறுகள் உள்ளிட்ட பல அறிகுறிகளை உருவாக்குகிறது.

அதிர்ஷ்டவசமாக, வரகு உள்ளிட்ட அனைத்து சிறுதானியங்களிலும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளன.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நம் உடலை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன (7).

5. செரிமானத்தை மேம்படுத்தும்

வரகு அரிசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகளவில் உள்ளன.

எனவே, இவை உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

மேலும், மூலநோய் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உண்டு வருவது மூலநோய் அறிகுறிகளைத் தணிக்க உதவும் (8).

வரகு அரிசியின் பக்க விளைவுகள்:

- Advertisement -

வரகு பயிருக்கு சில நேரத்தில் பூஞ்சை தொற்றுக்கள் வரலாம்  (9).

இந்தப் பூஞ்சைகள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பல நச்சுப் பொருட்களை உருவாக்குகின்றன (10).

எனவே, இவ்வாறு பூஞ்சை தொற்று ஏற்பட்ட வரகு அரிசியை உண்பதால் குமட்டல், மனச்சோர்வு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படலாம் (11).

- Advertisement -