கொள்ளு உண்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்

- Advertisement -

கொழுத்தவனுக்கு கொள்ளு (அறிவியல் பெயர்: Macrotyloma uniflorum) இளைத்தவனுக்கு எள்ளூ என்ற பழமொழி நாம் அனைவரும் அறிவோம். உண்மையில், கொள்ளுவில் ஏராளமான கனிமங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை பல உடல்நல நன்மைகளை அளிக்கின்றன.

முக்கியமாக, கொள்ளு குதிரைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது நிறைய மருத்துவ பயன்பாடுகளை கொண்டதால் பாரம்பரியமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொள்ளு உண்பதால் கிடைக்கும் 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நாம் காண்போம்.

கொள்ளு ஆரோக்கிய நன்மைகள்

கொள்ளு ஆரோக்கிய நன்மைகள்

1. நீரிழிவை தடுக்க உதவும்

கொள்ளு மிகவும் குறைவான கிளைசெமிக் இன்டெஸ் (51) கொண்டுள்ளது (1).

அவற்றை சாப்பிடுவது உடனடியாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. மாறாக, இது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது (2).

மேலும், கொள்ளுவை பச்சையாக உண்பது அதிக ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பச்சை கொள்ளு மிகவும் சக்திவாய்ந்தது.

ஏனெனில், பச்சைக் கொள்ளு அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட்டுகள் கொண்டவை (3).

2. எடை இழப்பிற்கு உதவுகிறது

உடல் பருமன் என்பது நம்மில் பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை. பருமனாக இருப்பது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

- Advertisement -

கொள்ளு எடையைக் குறைக்கும் திறனுக்காக பெயர் பெற்றது.


கொள்ளு உடல் நலத்திற்கு கேடான LDL கொழுப்பின் அளவைக் குறைக்கிறது (4). இதனால் எடையை இழப்பதோடு இருதய நோயிலிருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

மேலும், கொள்ளு மிக அதிக அளவு நார்ச்சத்தை கொண்டுள்ளது. நார்ச்சத்து உங்கள் பசியைக் குறைத்து, உங்களை அதிக நேரம் திருப்தியாக வைத்திருக்கும்.

3. பித்தப்பைக் கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை அகற்ற உதவும்

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியமாக கொள்ளு பாரம்பரியமாக பயன்படுத்தப் பட்டு வருகிறது.

கொள்ளுவில் பாலிபினால்கள் (Polyphenols) போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளன.

இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் பித்தப்பைக் கற்களுக்கு எதிராக செயல்படுவதோடு, சிறுநீரகக் கற்களை விரைவாக அகற்றவும் உதவுகிறது (5).

4. உங்கள் கல்லீரலை ரசாயன சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

பாராசிட்டமால் போன்ற இரசாயன வலி மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் கல்லீரலைச் சேதப்படுத்தும்.

கொள்ளு உங்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. மேலும், அதிக பாராசிட்டமால் உட்கொள்ளுதல் காரணமாக கல்லீரலில் ஏற்படும் ரசாயன சேதத்தையும் கொள்ளு குறைக்க உதவும் (6).

- Advertisement -

5. ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது

ஆஸ்துமா மூச்சுக்குழாயினை குறுகலாகவும், வீக்கமாகவும் ஆக்குவதன் மூலம் சுவாசத்தை கடினமாக்குகிறது.

அதிர்ஷ்டவசமாக, கொள்ளு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது காற்றுப்பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சுவாசிப்பதை எளிதாக்குகிறது (7).

6. மூல நோய் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது

மலச்சிக்கல் மலம் கழிப்பதை கடினமாக்குகிறது. மேலும், நீடித்த மலச்சிக்கல் மூல நோய்க்கு வழிவகுக்கும்.

கொள்ளுவில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. நார்ச்சத்து உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குவதனால் மூல நோயில் இருந்து பாதுகாக்கிறது.

7. அல்சரை குணப்படுத்த உதவும்

கொள்ளுவில் அதிக அளவு பீனோலிக் சேர்மங்கள் (Phenolic Compounds) உள்ளன.

இவை உங்களை வயிற்றுப் புண்களிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன (8, 9).

சுருக்கமாக சொன்னால், கொள்ளு உங்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான பயிறு. இது உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் சீராகவும் வைக்க பல நன்மைகளை வழங்குகிறது

 

 

- Advertisement -