வேர்க்கடலை: ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து விவரம்

- Advertisement -

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை (Peanuts) என்பது நொறுக்குத் தீனியாகவும், சட்னி போன்ற பல உணவுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

வேர்க்கடலை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய இந்திய சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது (12).

இந்த வேர்க்கடலை என்பது பல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலோனார் இவற்றை விரும்பி உண்பதில்லை.

வேர்க்கடலை நன்மைகள் - Benefits Of Peanuts In Tamil

வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள்

நிலக்கடலையில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளன.

100 கிராம் நிலக்கடலையில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன (3).

ஊட்டச்சத்து விவரம்:

  • கலோரி: 567
  • புரதம்: 25.8 கிராம்
  • நார்ச்சத்து: 8.5 கிராம்
  • கொழுப்புச்சத்து: 49.24 கிராம்
  • கார்போஹைட்ரேட்: 16.13 கிராம்
  • கால்சியம்: 92 மி. கிராம்
  • இரும்புச்சத்து: 4.58 மி. கிராம்
  • பொட்டாசியம்: 705 மி. கிராம்

இங்கு நிலக்கடலையின் ஆரோக்கிய நன்மைகளை நாம் காணலாம்.

வேர்க்கடலை நன்மைகள் (Benefits Of Peanuts):

இதயத்திற்கு நல்லது

வேர்க்கடலை மற்றும் அதன் தயாரிப்புகளான கடலை மிட்டாய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவை மற்ற குறைந்த கொழுப்புள்ள உணவுகளை விட இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகின்றன (4).

நிலக்கடலையில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது மொத்த உடல் கொழுப்பு மற்றும் LDL கொழுப்பையும் (கெட்டது) குறைக்க உதவுகிறது (5).

- Advertisement -

இதன் விளைவாக, வேர்க்கடலை உட்கொள்வதால், கரோனரி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முடியும் (6).

எடை இழப்பை ஊக்குவிக்கிறது

வேர்க்கடலை புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகின்றன.

மேலும், வேர்க்கடலையை சாப்பிடுவது பசியை நீக்கி மனநிறைவான உணர்வைத் தருகிறது. இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவுகிறது (7891011, 12).

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

வேர்க்கடலை 23 என்ற குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் (GI) கொண்டுள்ளது. எனவே இவை உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது (13).

மேலும், அவற்றில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் மற்றும் புரதம், நார்ச்சத்து போன்ற மற்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.

நார்ச்சத்து மற்றும் புரதம் பசியின்றி நீண்ட நேரம் திருப்தியுடன் உங்களை வைத்திருக்கும் (14).

நரம்பு சிதைவு நோய்களை தடுக்க உதவுகிறது

வேர்க்கடலையில் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் மிக அதிகமாக உள்ளன.

இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நரம்புஅழற்சியைத் தடுத்து, அல்சைமர் எனும் நரம்புசிதைவு நோய்க்கு எதிராக செயல்படுகின்றன (1516, 17).

- Advertisement -

பித்தப்பைக் கற்களை தடுக்க உதவுகிறது

வட இந்தியாவில் பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டோர் மிக அதிகம் (18).

குறிப்பாக 41.5% பெண்களுக்கு பித்தப்பை கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

நிலக்கடலை தொடர்ந்து உட்கொள்வது, பித்தப்பை கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன (1920).

இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவைப்பட்டாலும், நிலக்கடலையின் கொழுப்பைக் குறைக்கும் விளைவு இதற்கு உதவலாம் என அறியப்படுகிறது (21).

முடிவு செய்தல்

இந்த வேர்க்கடலையில் பல நன்மைகள் உள்ளதால் அவற்றை உங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.

உங்கள் உடல் எடையை குறைக்க அல்லது கட்டுப்படுத்த, ஆரோக்கியமாக பராமரிக்க வேர்க்கடலையை தினசரி உண்டு வருவது அவசியம்.

- Advertisement -