முள்ளங்கி-ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகள்

- Advertisement -

முள்ளங்கி அல்லது ரேடிஸ் (Radish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சார்ந்தவை. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இவை அதிகமாக பயிரிடப்படுகின்றன.

முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கி, சிகப்பு முள்ளங்கி போன்ற பல பல வகைகள் உள்ளன. நாம் வெள்ளை முள்ளங்கி பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பல நூற்றாண்டுகளாக, வெள்ளை முள்ளங்கி உள்ளிட்ட அணைத்து முள்ளங்கிகளும் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாக வெள்ளை முள்ளங்கி விளங்குகிறது.

இவை ஆயுர்வேதத்திலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பதிவில் நாம் முள்ளங்கி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் ஊட்டச் சத்துக்கள் பற்றி காண்போம்.

தோற்றம்:

வெள்ளை முள்ளங்கி நீண்ட கால் போன்ற தோற்றம் கொண்டது. இது மண்ணுக்கு அடியில் வளரக்கூடிய ஒரு தாவரம்.

முள்ளங்கி நன்மைகள் - Benefits Of Radish In Tamil

இது தரைக்கு மேலே, அதன் மேல் பகுதியில் வேகமாக வளரும் இலைகளைக் கொண்டுள்ளது. முள்ளங்கியை நாம் சமைத்த பிறகோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம்.

- Advertisement -

சமைத்த முள்ளங்கி அல்லது அதன் சூப் மிகுந்த சுவையானதாக இருக்கும். சிலபேர் முள்ளங்கியை ஊறுகாயில் கூட பயன்படுத்துகிறார்கள்.

மேலும், முள்ளங்கி இலைகளை நாம் சாலட்களில் கூட பயன்படுத்தலாம்.

முள்ளங்கி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

இங்கு வெள்ளை முள்ளங்கி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் காணலாம்.

1. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

வெள்ளை முள்ளங்கியில் பாலிபினால்கள் போன்ற பினோலிக் சேர்மங்கள் நிறைய உள்ளன. இந்த சேர்மங்கள் கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன (12).

இந்த சேர்மங்கள் முள்ளங்கியின் தோல் மட்டும் வேரில் அதிகமாக உள்ளதால் அவற்றை தோலுடன் உண்பது நல்லது.

2. எடை இழப்பிற்கு உதவுகிறது

வெள்ளை முள்ளங்கி குறைவான கலோரிகளையும் மற்றும் அதிகமான நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அது உடல் எடையை குறைக்க உதவும் (3).

மேலும், இது மாவுச்சத்து இல்லாத காய்கறியாக இருப்பதால், குறைந்த அளவே கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது.

குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது உங்களுக்கு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் (4).

- Advertisement -

எனவே, முள்ளங்கி போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியமாக உங்கள் எடையை பராமரிக்க உதவும்.

3. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது

வெள்ளை முள்ளங்கியில் நமது இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஒரு ஆய்வில் (5), காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது இதய மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் என தெரியவந்துள்ளது.

மேலும், வெள்ளை முள்ளங்கியை போன்ற சிலுவை காய்கறிகளை (Cruciferous Vegetables) உண்பது இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன (6).

4. டைப் 2 நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும்

முள்ளங்கி மற்றும் அதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க உதவும் (7).

மேலும், சிட்ரஸ் பழங்கள் அல்லது சிலுவை காய்கறிகளை உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (8).

எனவே, வெள்ளை முள்ளங்கி உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும்.

5. செரிமானத்தை மேம்படுத்துகிறது

வெள்ளை முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்துக்களும் தண்ணீரும் உள்ளன.

- Advertisement -

நார்ச்சத்து மற்றும் தண்ணீர் இவை இரண்டும் குடல் அசைவுகளுக்கு உதவுவதால் மலச்சிக்கலை தடுக்க உதவும் (9).

மேலும், வெள்ளை முள்ளங்கி உங்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராட உதவும்.

6. பூஞ்சை எதிர்ப்பு குணத்தை கொண்டுள்ளது

மற்ற முள்ளங்கிகளைப் போலவே, வெள்ளை முள்ளங்கி ஒரு இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு காய்கறியாகும் (10).

இது பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் வாய்வழி ஈஸ்ட் தொற்றுகள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை பாக்டீரியாக்களைக் குறைக்கிறது.

மேலும் இது விலங்குகள் மற்றும் மனிதர்களில் இனப்பெருக்க சிக்கல்களைத் தரும் ஜென் என்று அழைக்கப்படும் நச்சுப் பூஞ்சையும் குறைகிறது. எனவே, இது ஆன்டி-ஆக்சிடன்ட் அளவுகளை மேம்படுத்தி, இனப்பெருக்க பிரச்சனைகளை தடுக்கிறது.

இப்போது, வெள்ளை முள்ளங்கி பற்றிய ஊட்டச்சத்து உண்மைகளைக் காண்போம்.

வெள்ளை முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வெள்ளை முள்ளங்கி பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

100 கிராம் வெள்ளை முள்ளங்கி கீழ்க்கண்ட ஊட்டச்சத்தை அளிக்கின்றன (11).

  • தண்ணீர்  – 91.59 கிராம்
  • கலோரி – 43 கிலோ கலோரி
  • புரதம் – 0.65 கிராம்
  • கொழுப்பு – 3.21 கிராம்
  • கார்போஹைட்ரேட் – 3.3 கிராம்
  • நார்ச்சத்து  – 1.5 கிராம்
  • சர்க்கரை – 1.76 கிராம்
  • கால்சியம் (Ca) – 17 மிகி
  • இரும்பு (Fe) – 0.15 மிகி
  • மெக்னீசியம் (Mg) – 9 மி.கி
  • பாஸ்பரஸ் (P) – 23 மி.கி
  • பொட்டாசியம் (K) – 275 மி.கி
  • சோடியம் (Na) – 267 மி.கி
  • துத்தநாகம் (Zn) – 0.13 மிகி
  • காப்பர் (Cu) – 0.098 மி.கி
  • செலினியம் (Se) – 0.7 மைக்ரோ கிராம்
  • வைட்டமின் சி – 14.6 மிகி
  • ரிபோஃப்ளேவின் – 0.022 மி.கி
  • நியாசின் – 0.145 மிகி
  • வைட்டமின் பி -6 – 0.037 மி.கி
  • ஃபோலேட் – 16 மைக்ரோ கிராம்
  • கோலின் – 6.6 மிகி
  • வைட்டமின் ஈ – 0.35 மிகி
  • வைட்டமின் கே – 3.8 .g
  • கொழுப்பு அமிலங்கள் – 0.478 கிராம்

எனவே, வெள்ளை முள்ளங்கி பல நாள்பட்ட நோய்களில் இருந்து உங்களைக் காக்கும் மிகச்சிறந்த காய்கறியாகும். மேலும், இது உடல் எடையைக் குறைக்க உதவும், செரிமானத்தை மேம்படுத்தும்.

- Advertisement -